கிராமப்புற பெண்களுக்கு எரிவாயு சிலிண்டர் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வரும் 20-ஆம் தேதி உஜ்வாலா தினம் கொண்டாடப்பட உள்ளது.
திருப்பரங்குன்றம் பகுதியில் எரிவாயு முகவர்களுடன் ஆலோசனை நடத்த வந்த எண்ணெய் நிறுவனங்களுக்கான மண்டல அலுவலர் அஸ்வின் இதுதொடர்பாக திங்கள்கிழமை கூறியது:
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் ஏப்.20 ஆம் தேதியை உஜ்வாலா தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கிராமப்புற பெண்களுக்கு பாதுகாப்பான, நீடித்த எல்.பி.ஜி பயன்பாட்டிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம்.
அன்று நாடு முழுவதும் 15 ஆயிரம் எல்.பி.ஜி. கிராமங்களை தேர்வு செய்து, ஒரு கிராமத்துக்கு குறைந்தபட்சம் 500 பேருக்கு விழிப்புணர்வும், கிராமத்துக்கு புதிதாக 100 எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கும் பதிவு செய்யப்பட உள்ளது. மதுரை மண்டலத்தில் மதுரை கப்பலூர்,
திருமங்கலம், கருமாத்தூர் உள்ளிட்ட 52 கிராமங்களும், விருதுநகர் மாவட்டத்தில் 35 கிராமங்களும், தேனி மாவட்டத்தில் 25 கிராமங்களிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


