பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
மதுரை விமானநிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குற்றங்கள் 2016-ஆம் ஆண்டைவிட 2017-இல் பல மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அங்கு பாஜக ஆதரவிலான ஆட்சி நடைபெறுகிறது. அதேபோல பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசம், குஜராத், அதன் கூட்டணி கட்சி ஆளும் பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள சம்பவங்கள் நாட்டை உலுக்கி உள்ளன. இங்கெல்லாம் பாஜக அல்லது பாஜக கூட்டணி கட்சிகளே ஆட்சியில் உள்ளன.
காவிரி பிரச்னையில் கர்நாடகத்திற்கு ஆதரவான ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலத்தடி நீரை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் பெங்களூரில் இன்றைய நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதனை அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை. நடுவர் மன்ற தீர்ப்புக்கு நேர் விரோதமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
காவிரி பிரச்னையில் வாதாட கர்நாடகம் அரசு ஒரே வழக்குரைஞரை (ஃபாலி நாரிமன்)த்தான் 15 ஆண்டுகளாக வைத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் காவிரி வழக்கில் இதுவரை 15 வழக்குரைஞர்கள் மாறிவிட்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னைகள் சரியாக கையாளப்பட்டன. தற்போது அதுபோல இல்லை.
காவிரிப் பிரச்னை தொடர்பாக திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிரதமரை சந்தித்து அவரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிக்கை விடுக்க உள்ளோம்.
ஸ்டெர்லைட் பிரச்னையில் மக்களிடம் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
அதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தப் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் காங். எம்.பி மீது தாக்குதல்! சரிந்து விழுந்ததால் பரபரப்பு! | West Bengal

உலகின் தலைசிறந்த பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக்..! பிஎஸ்ஜி அணியின் தலைவர் புகழாரம்!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கடற்படை தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்


