தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

மதுரையில் ஏப்.23-இல் பெரியார் சிலை முதல் தமிழன்னை சிலை வரை மனிதச் சங்கிலி: திமுக, கூட்டணி கட்சிகள் முடிவு

காவிரி மேலா ண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் பெரியார் சிலை முதல் தமிழன்னை சிலை வரை ஏப்ரல் 23-இல் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:36 am IST

காவிரி மேலா ண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் பெரியார் சிலை முதல் தமிழன்னை சிலை வரை ஏப்ரல் 23-இல் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
காக்கா தோப்பு தெருவில் உள்ள திமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக மாநகர் மாவட்டச் செயலர்கள் வ.வேலுச்சாமி, கோ.தளபதி  ஆகியோர் தலைமை வகித்தனர். 
காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் வீ.கார்த்திகேயன், பொருளாளர் ராதாகிருஷ்ணன்,  மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் புதூர் மு.பூமிநாதன்,  தொழிற்சங்க மாநில இணைப் பொதுச் செயலர் மகபூப் ஜான்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்.அண்ணாதுரை, ஜோதிராம், இந்திய கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலர் சரவணன் மற்றும் அப்துல் காதர் ஆலிம் (முஸ்லிம் லீக்), ஷேக் இப்ராகிம் (தமுமுக), காதர் மைதீன் (மனிதநேய மக்கள் கட்சி), சாமிக்கண்ணு (ஆதித் தமிழர் பேரவை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இதில், மதுரையில் வரும் 23-ஆம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை தல்லாகுளம் பெரியார் சிலை அருகிலிருந்து தமிழன்னை சிலை வரை  மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.