காவிரி மேலா ண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் பெரியார் சிலை முதல் தமிழன்னை சிலை வரை ஏப்ரல் 23-இல் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
காக்கா தோப்பு தெருவில் உள்ள திமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக மாநகர் மாவட்டச் செயலர்கள் வ.வேலுச்சாமி, கோ.தளபதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் வீ.கார்த்திகேயன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் புதூர் மு.பூமிநாதன், தொழிற்சங்க மாநில இணைப் பொதுச் செயலர் மகபூப் ஜான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்.அண்ணாதுரை, ஜோதிராம், இந்திய கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலர் சரவணன் மற்றும் அப்துல் காதர் ஆலிம் (முஸ்லிம் லீக்), ஷேக் இப்ராகிம் (தமுமுக), காதர் மைதீன் (மனிதநேய மக்கள் கட்சி), சாமிக்கண்ணு (ஆதித் தமிழர் பேரவை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், மதுரையில் வரும் 23-ஆம் தேதி மாலை 4 முதல் 5 மணி வரை தல்லாகுளம் பெரியார் சிலை அருகிலிருந்து தமிழன்னை சிலை வரை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








