திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா: தேவேந்திர பூஜையுடன் நிறைவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா பனிரெண்டாம் நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை தேவேந்திர பூஜையுடன் நிறைவுற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:11 am

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா பனிரெண்டாம் நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை தேவேந்திர பூஜையுடன் நிறைவுற்றது.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா 
கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் அம்மன், சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தனர். கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற சுவாமிகளின் மாசி வீதி உலாவை,  தினமும் லட்சக்கணக்கான மக்கள் கண்டு தரிசித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஏப்ரல் 25 ஆம் தேதி (புதன்கிழமை) இரவு மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், ஏப்ரல் 26 ஆம் தேதி (வியாழக்கிழமை) மீனாட்சியம்மன் திக்கு விஜயமும் நடைபெற்றன. ஏப்ரல் 27 (வெள்ளிக்கிழமை) காலை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 28 (சனிக்கிழமை) காலை தேரோட்டமும் நடைபெற்றன.
     தொடர்ந்து, சனிக்கிழமை இரவு சப்தாவர்ணச் சப்பரத்தில் அம்மனும், பிரியாவிடையுடன் சுவாமியும் எழுந்தருளி அருள்பாலித்தனர். சுவாமி, அம்மன் ஒரே சப்பரத்தில் எழுந்தருள்வதை தேர்தடம் பார்த்தல் என அழைக்கப்படுகிறது. அப்போது, சுவாமி தரிசனம் செய்ய மாசி வீதிகளில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குழுமியிருந்தனர். கோலாட்டம், சாமியாட்டம் என குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த சப்தாவர்ணச் சப்பர உலா இரவு 11 மணிக்கு நிறைவடைந்தது. 
    ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபம் ஆடிட்டர் லெட்சுமணன் சிவராமன் மண்டகப்படியில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். பின்னர், உச்சிக்காலத்தில் பொற்றாமரைக்குளத்தில் தேவேந்திர பூஜை நடைபெற்றது. இரவு 9 மணி அளவில் பதினாறுகால் மண்டபத்தில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் விடை பெற்றுக்கொள்ளும் பூஜைகள் நடைபெற்றன. அதையடுத்து, சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
    அழகர் மலையிலிருந்து சனிக்கிழமை மாலை புறப்பட்ட கள்ளழகர் மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்த நிலையில், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவடைந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.