கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்: மாநகரக்காவல் ஆணையர் வெளியிட்டார்

மதுரையில் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் குறுந்தகடை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் புதன்கிழமை வெளியிட்டார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

மதுரையில் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் குறுந்தகடை மாநகரக் காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் புதன்கிழமை வெளியிட்டார்.
மதுரை மாநகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக  காமராஜர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை ஆராய்ச்சி மாணவர் செந்திலிங்கம், பொறியியல் மாணவர் விக்னேஷ் உள்பட 6 பேர் கொண்ட குழுவினர் எச்சரிக்கை கீதம் என்ற பெயரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். 
இதில் 4 நிமிடங்கள் 30 நொடிகள் ஓடக்கூடிய இந்த எச்சரிக்கை கீதம் விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி மதுரை மாநகர் காவல் ஆணையர்அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் மாநகரக் 
காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் பங்கேற்று விழிப்புணர்வு பாடல் குறுந்தகடை வெளியிட்டு பேசியது:
மதுரை நகரில் விபத்து உயிரிழப்பு மற்றும் விபத்துக்களை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
இதில் விபத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக செந்திலிங்கம் தலைமையில் மாணவர்கள்அவர்கள் சொந்த முயற்சியில் பாடலை உருவாக்கி ஆல்பமாகவும் தயாரித்துள்ளனர். மதுரை நகருக்கு அது பொருத்தமாக இருந்ததால் பாடல் வெளியிடப்படுகிறது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கருத்துக்களை கொண்டு செல்லும்போது இசையுடனும், காட்சி சித்தரிப்புகள் மூலம் கொண்டு செல்லும்போது அது கவனத்தை கவரும்.  
மதுரையில் தற்போது விபத்துக்கள் குறைந்து வருகின்றன. எனவே இந்தப்பாடலை காவல்துறை கட்செவி அஞ்சல் உள்பட சமூக வளைதளங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். 
மதுரை நகரில் உள்ள கல்லூரிகளில் போதைத்தடுப்புக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே போதை தடுப்பு விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்குவதாக இந்தக்குழுவினர் தெரிவித்துள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் துணை ஆணையர் அருண் கோபாலன், போக்குவரத்து உதவி ஆணையர்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.