ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

மதுரை கல்வி நிறுவனங்களில் சுதந்திர தினவிழா

மதுரையில் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளிகளில் நாட்டின் 72 வது சுதந்திர தின விழா கோலாகலமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

மதுரையில் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளிகளில் நாட்டின் 72 வது சுதந்திர தின விழா கோலாகலமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் டி.ராமகிருஷ்ணன் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பதிவாளர் வி.சின்னையா,  ஆட்சிக்குழு உறுப்பினர்கள் லில்லிஸ் திவாகர், நல்லகாமன், முதன்மையர் ஏ.முத்துமாணிக்கம் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் கே.அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் பொறுப்பு பேராசிரியர் பி.ஜார்ஜ் தேசியக் கொடியேற்றினார்.  மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் முதல்வர் சூ.வானதி தேசியக் கொடியை ஏற்றினார்.  
 ராமகிருஷ்ண மடம் சாரதா வித்யாலயா: மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சாரதா வித்யாலயாவில் நடைபெற்ற விழாவில் மடத்தின் தலைவரும், வித்யாலயாவின் தலைவருமான சுவாமி கமலாத்மானந்தர் கொடியேற்றிப் பேசுகையில், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். நமது ரூபாய் தாள்களில் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையை அர்ஜூனனுக்கு ரதத்தில் உபதேசிக்கும் காட்சியை பதிவிட்டு வெளியிட்டால் இந்திய கலாசாரத்தை எதிர்காலத்தலைமுறை அறியும் நிலை ஏற்படும் என்றார்.
தெற்குவாசல் நாடார் பள்ளி: மதுரை தெற்குவாசல் நாடார் பள்ளிக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.பார்த்திபன் தலைமை வகித்தார். உறவின்முறைத் தலைவர் எஸ்.கணபதி முன்னிலை வகித்தார். உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க முன்னாள் செயலர் பி.சுபாஷ்சந்திரபோஸ் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் டி.பாலசுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினார். 
எஸ்.பி.ஓ.ஏ.பள்ளி: மதுரை  எஸ்.பி.ஓ.ஏ.பதின்ம மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகி பரமசிவம் தேசியக்கொடியை ஏற்றினார். தாளாளர் செந்தில், பள்ளி முதல்வர் எஸ்.சீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அல்அமீன் பள்ளி: புதூரில் உள்ள அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் கைத்தொழில் மற்றும் கல்விச்சங்கச் செயலர் அஷ்ரப்யூசுப் தலைமை வகித்தார். நல்லதம்பி முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஷேக்நபி வரவேற்க, சுந்தர் தேசியக்கொடியேற்றினார். 
எஸ்.பி.ஜே. மெட்ரிக்.பள்ளி: அவனியாபுரம் கல்குளம் பகுதியில் உள்ள எஸ்.பி.ஜே.மெட்ரிக்குலேசன் பள்ளியில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கத்துறை) ஜே.காளிதாஸ் கொடியேற்றினார்.  பள்ளித் துணைத் தலைமை ஆசிரியர் 
ஏ.அஜிதா தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் ஜே.பழனிச்சாமி முன்னிலை வகித்தார். 
மகரிஷி வித்யாமந்திர்: மதுரை கோவில்பாப்பாகுடியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் கொடியேற்று விழாவில் மருத்துவர்கள் கே.ஜெயராமன், தங்கப்பாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 
திருஞானம் துவக்கப் பள்ளி: மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள டாக்டர் டி.திருஞானம் துவக்கப் பள்ளியில் தென்றல் அரிமா சங்கத் தலைவர் இளங்கோவன் கொடியேற்றினார். ஜெயகுமார், மணிவாசகன், சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளித் தலைவர் சுரேஷ்பாபு வரவேற்றார். தலைமை ஆசிரியர் 
க.சரவணன் நன்றி கூறினார். 
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கோயிலில் பொது விருந்து நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன், ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகசெல்வி, வடாட்சியர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் தங்கபாண்டி, கோயில் கண்காணிப்பாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  
திருப்பரங்குன்றம் வட்டாட்சிய் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுரேஷ் தேசியக் கொடியேற்றினார்.  திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 
வட்டார வளர்ச்சி அலுவலர் சோனாபாய் தேசியக் கொடியேற்றினார்.
 மகாகவி பாரதி வாசகர் வட்டம் சார்பில் திருநகர் கிளை நூலகம் முன்பு அரசு போக்குவரத்துக் கழக முன்னாள் பொதுமேலாளர் கிருஷ்ணசாமி தலைமையில், குருசாமி தேசியக் கொடியேற்றினார். 
மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குநர் வி.வி.ராவ்  தேசியக் கொடியை ஏற்றினார். மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை ஆணையர் மொஹந்தி தலமையில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. விமான நிலைய தீயணைப்பு துறை சார்பில் தேசியக்கொடியின் மூவர்ணத்தில் வானத்தில் தண்ணீர் பீய்ச்சி அடித்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கல்லூரி முதல்வர் 
எஸ்.நேரு தலைமையில் மதுரை மத்திய சட்டப்பேரவை உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தேசியக்கொடியேற்றினார். 
உசிலம்பட்டி:  உசிலம்பட்டியில் புதன்கிழமை  சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் கல்லூரி மற்றும் பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் முருகேசன் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர் தியாகிகள் கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.  உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி, கிராம நிர்வாக அலுவலர்கள் வாசிமுத்து, பத்மநாபன், பிரபாகரன், காளீஸ்வரி, செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலூர்: கள்ளழகர் திருக்கோயிலில் திருக்கல்யாண மண்டபத்தில் பொது விருந்து நடைபெற்றது. மேலூர் 
வட்டாட்சியர் சரவணன் தலைமை வகித்தார். அதிமுக மருத்துவ அணி செயலர் மருத்துவர் கணேசன், மேலூர் நகரச் செயலர் பாஸ்கரன் மற்றும் கோயில் அலுவலர்களும் கலந்து கொண்டனர். 
மேலூர் காமாட்சியம்மன் சுந்தரேசுவர் கோயிலில் நடைபெற்ற பொது விருந்துக்கு துணை வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் கோயில் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.