உள்ளாட்சி அமைப்புகளில் சீரான குடிநீர் விநியோகத்திற்காக தமிழக நகராட்சி பொறியாளர்களுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் விரைவில் குடிநீர் விநியோகத்திற்கு மீட்டர் முறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பால் மழைவளம் குறைந்து வருவதோடு, நீர் மேலாண்மை திட்டங்களில் கவனம் செலுத்தாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்ட குடிநீர்த்திட்டங்கள் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. இதுதவிர குடிநீர் திருட்டு, தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது போன்ற காரணங்களால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் குடிநீர் குழாய் கட்டணமாக மாதம் ரூ.50 வசூலிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு தண்ணீர்வருகிறதோ அதை முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால் முறைகேடு நடப்பதை கண்டறிவதும் சிரமம். மேலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சேதம் ஏற்படுவதை உடனடியாக தெரிந்து கொள்வதற்கான வசதிகளும் இல்லை. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்ததீர்வு காண உலகவங்கி உதவியுடன் பிலிபைன்ஸ் நாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த 124 நகராட்சி பொறியாளர்களுக்குசிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தலா 24 பேர் வீதம் 5 பிரிவாக இப்பயிற்சிக்கு பொறியாளர்கள் அனுப்பப்பட்டு வருகிறனர்.
இப்பயிற்சிக்குச் சென்று வந்த மேலூர் நகராட்சி பொறியாளர் ரத்தினவேலு சனிக்கிழமை கூறியது: நகரில் அனைத்து பகுதிக்கும் சீரான குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தவும், கனிணி மயமாக்கவும், முறைகேடுகளையும் , சேதாரத்தை தடுக்கவும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் வீடுகள் தோறும் மீட்டர் பொருத்தி குடிநீர் விநியோகத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ளனர். உலகிலேயே சிறப்பான நிர்வாக முறை பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளதால், தமிழக பொறியாளர்களுக்கு இந்த நேரடிபயிற்சி அளித்துள்ளனர். மேலும் இந்த முறையை தமிழகத்தில் விரைவில் அமல்படுத்தவுள்ளனர். மதுரை மாவட்டத்தில் மீட்டர்முறை மேலூரில் முதல் கட்டமாக அமலுக்கு வரும். தற்போது குடிநீர் இணைப்புக்கு மாதாந்திர கட்டணம் ரூ.50 ஆக உள்ளதை ரூ.100 ஆக உயர்த்தப்படவுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
26 ஆண்டுகளாக... கார்கில் போர் தியாகியின் குடும்பத்திற்கு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்!

வாட்ஸ் ஆப்பில் பூமர்களை தடைசெய்ய வேண்டும்: சசி தரூர் மகன் கிண்டல்

பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அனுமதி அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! கே.சி. வேணுகோபால்

நடுகடலில் தீப்பிடித்த படகு! பாதுகாப்பாக தப்பித்த மீனவர்கள்! | Thoothukudi
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


