முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவுநாளையொட்டி திருப்பரங்குன்றத்தில் அதிமுக, அமமுகவினர் திங்கள்கிழமை எம்ஜிஆர் சிலை, படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கும், தொடர்ந்து 16 கால் மண்டபம் பகுதியில் அதிமுக இலக்கிய அணி சார்பில் எம்.ஜி.ஆர் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட செயலர் எம்.ரமேஷ், பொதுக்குழுஉறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய செயலர் ராமகிருஷ்ணன், துணைச் செயலர் நிலையூர் முருகன், பகுதி செயலர்கள் பன்னீர்செல்வம், முனியாண்டி, கவிஞர் ப.மோகன்தாஸ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஹமிதா அக்பர் அலி, ஜெ பேரவை முன்னாள் செயலர் பாரி, வட்டசெயலர் பொன்.முருகன், கர்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலர் கே.கருத்தகண்ணன், மாவட்ட துணைசெயலர் எஸ்.எஸ்.டி.மனோகரன், ஜெ பேரவை மாவட்ட செயலர் செல்வம், பகுதி செயலர் ராமமூர்த்தி, ஒன்றிய துணைச்செயலர் முத்துராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருநகர் 2 ஆவது பேருந்து நிறுத்தம், மகாலெட்சுமி காலனி ஆகிய பகுதிகளில் அதிமுக 98 ஆவது வட்ட செயலர் என்.எஸ்.பாலமுருகன் தலைமையில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாணவரணி ஒன்றிய செயலர் சசிகுமார், ஜெயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உசிலம்பட்டியில்: உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் தேவர் சிலை அருகில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு எம்எல்ஏ பா.நீதிபதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நகர செயலர் பூமா கே.ஆர்.ராஜா, நகர பேரவை செயலர் வழக்குரைஞர் லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன், நக்கலப்பட்டி ஊராட்சி செயலர் போஸ் உள்பட அக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அமமுக சார்பில் உசிலம்பட்டி நகர செயலர் குணசேகரபாண்டியன் தலைமையில் தேனி சாலையில் உள்ள முருகன் கோயில் முன் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில், ஒன்றிய செயலாளர் சேதுராமன், மாவட்ட பாசறை செயலர் டிக்கா.ராஜா, தொழில்நுட்ப மாவட்டத் தலைவர் பிரகதீஸ்வரன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செயலர் ராஜாராம், மாவட்ட பொருளாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொறியியல் கலந்தாய்வு! ரேண்டம் எண் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்

பெனால்டியில் கோல் அடித்த மெஸ்ஸி: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

மீண்டும் போர்? ஜோர்டான், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!


