இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 15 மாநிலங்களின் கைத்தறி துணிகள் விற்பனை

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 15 மாநிலங்களின் கைவினைஞர்கள் பங்கேற்றுள்ள கைத்தறி துணிகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.

Updated On :25 டிசம்பர் 2018, 8:16 am IST

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 15 மாநிலங்களின் கைவினைஞர்கள் பங்கேற்றுள்ள கைத்தறி துணிகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.
 15 மாநிலங்களில் இருந்து 125 கைவினைஞர்கள் தாங்கள் தயாரித்துள்ள பொருள்களை 160 அரங்குகளில் விற்பனைக்கு வைத்துள்ளனர். 
லக்னௌவில் இருந்து சுடிதார் சேலைகள், குர்தா பைஜாமா, மேலாடைகள் போன்றவை இதில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குஜாரத் எத்னிக் பிரிண்ட் குர்தீஸ், மெட்டீரியல், பிளாக் பிரிண்ட் டிரஸ் மெட்டீரியல், கோட்டாதொரியா துணி ரகங்கள், சோளி, பந்தேஜ் சூட்ஸ், ராஜஸ்தான் ஆடைகள், பஞ்சாப் பாட்டியாலா புல்காரி ஆடை ரகங்கள், மத்திய பிரதேசத்தின் சந்தேரி சல்வார், மகேஸ்வரி சல்வார், பிளாக்பிரிண்ட் உள்ளிட்டவையும் விற்கப்படுகின்றன.
 காந்தி நிகேதன் ட்ன்ட் சேலை, காந்தா சேலைகள் மேற்கு வங்கத்தின் சிபான் மற்றும் கிரேப் சேலைகள், ஒடிசாவின் சம்பல்புரி இக்கத் சேலைகள், கத்வால் ஜரிகை, பார்டர் டிரஸ் மெட்டீரியல், மதுரை சேலைகள், ஹிமாச்சல பிரதேசத்தின் குர்தீஸ், உத்தரபிரதேச பனாரஸ் சில்க், காட்டன் சேலைகள், சத்தீஸ்கர் சில்க் சேலைகள், ராஜஸ்தான் ஸ்டோன் நகைகள், தில்லி பேன்சி நகைகள், வீடுகளை அலங்கரிக்கும் கலைப்பொருள்களும் கிடைக்கின்றன.  இக்கண்காட்சி வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும். கண்காட்சி மற்றும் விற்பனையில் அனுமதி இலவசம். தினசரி காலை 10.30 முதல் இரவு 9 வரை அரங்குகளை பார்வையிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.