அப்பல்லோ மருத்துவமனைக்கு ரோட்டரி விருது

மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கத்தின் மாற்றத்தை ஏற்படுத்துதல் விருது வழங்கப்பட்டுள்ளது.
Published on

மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கத்தின் மாற்றத்தை ஏற்படுத்துதல் விருது வழங்கப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக  மருத்துவமனை நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
 மதுரையில் ரோட்டரி ஜெம்ஸ் சர்வதேச மாவட்ட கருத்தரங்கு ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ரோட்டரி சங்கம், ஆண்டுதோறும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி சமுதாய வளர்ச்சிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்கும் தனி நபர், நிறுவனத்தை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உறுப்பு தானம் மற்றும் உறுப்பு தானம் மூலம் பல உயிர்களுக்கு வாழ்வளிக்க முடியும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி, பெருநகரங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த சிக்கலான கல்லீரல் மாற்று அறுவை சிசிகிச்சைகளை மதுரை போன்ற நகரங்களிலும் மேற்கொண்டு வரும் மதுரை அப்பல்லோ மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டு சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துதல் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,  அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆனந்த ராமமூர்த்தி, பழனிவேல்ராஜூ, ராஜேஷ்பிரபு, ஜான் ஆகியோரிடம் வழங்கினார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com