மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சாலைகள் மேம்பாடே வளர்ச்சியின் அடித்தளம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சாலை மேம்பாடும், உள்கட்டமைப்பு வசதிகளுமே நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Updated On :9 ஜூலை 2018, 1:42 am

சாலை மேம்பாடும், உள்கட்டமைப்பு வசதிகளுமே நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
 கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 8 சாலைகளின் மேம்பாட்டுப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  மதுரை- நத்தம் பறக்கும் மேம்பாலம், மதுரையிலிருந்து தனுஷ்கோடிக்கு புதிய சாலை, மேலூரிலிருந்து தஞ்சைக்கு 8 வழிச்சாலை என பல சாலை வசதிகள் உருவாக்கப்படவுள்ளன. சாலை வசதிகளால் மதுரை பகுதியில் புதிய தொழிற்சாலைகள் உருவாகும் நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சாலை பயன்பாட்டை முழுமையாக அறிந்து கொள்ளாமல் சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்ப்பது சரியல்ல. சாலை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என நீதிமன்றம் அறிவுரை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.
 நிகழ்ச்சியில் சிவரக்கோட்டை-சென்னம்பட்டி,  மருதங்குடி-திருமால்,  வடக்கம்பட்டி-புளியம்பட்டி ஆகிய தார்ச்சாலைப் பணிகளையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். மேலும், நெடுங்குளம், டி.புதூர், டி.கொக்குளம் ஆகிய பகுதி சாலைகள், எஸ்.கிருஷ்ணாபுரம் முதல் பாறைக்குளம் வரையிலான சாலை மற்றும் திருமால் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கான கூடுதல் கட்டடம் என மொத்தம் ரூ.8.69 கோடி மதிப்பிலான பணிகளை அவர் தொடங்கி வைத்தார்.
 நிகழ்ச்சியில் உசிலம்பட்டி கோட்டாட்சியர் முருகேசன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.