"ஸ்டவ்' அடுப்பு வெடித்து இளம்பெண் சாவு
வெள்ளரிப்பட்டி அருகே "ஸ்டவ்' அடுப்பு வெடித்து படுகாயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.


வெள்ளரிப்பட்டி அருகே "ஸ்டவ்' அடுப்பு வெடித்து படுகாயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் வெள்ளரிப்பட்டி அருகே உள்ள முசுண்டகிரிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ம், அழகிமீனா (18) என்ற பெண்ணுக்கும், கடந்த 6 மாதம் முன் திருமணம் நடைபெற்றது. சனிக்கிழமை வீட்டில் சமையல் செய்த போது "ஸ்டவ்' அடுப்பு வெடித்ததில், அழகிமீனா பலத்த காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மேலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலூர் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...