தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

முன்னாள் எஸ்.பி. காரில் செல்லிடப்பேசி, கடவுச்சீட்டு திருட்டு

மதுரையில் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் காரில் இருந்து விலை உயர்ந்த செல்லிடப்பேசிகளை அடையாளம் தெரியா

Updated On :23 ஜூலை 2018, 7:09 am IST

மதுரையில் முன்னாள் காவல் கண்காணிப்பாளர் காரில் இருந்து விலை உயர்ந்த செல்லிடப்பேசிகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை பொன்மேனி ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் சென்ராயப்பெருமாள் (73). காவல்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  இந்நிலையில் சென்றாயப் பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று விட்டு காரில் மதுரைக்கு வந்துள்ளார். வீட்டுக்குச் செல்லும் வழியில் பைபாஸ் சாலையில்  உள்ள உணவகம் முன்பாக காரை நிறுத்தி விட்டு உணவகத்துக்குள் சென்றார். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது காரில் வைத்திருந்த 2 "ஐ போன்கள்', செல்லிடப்பேசி மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக சென்றாயப்பெருமாள் அளித்தப் புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.