புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இயக்குநர் கௌதமனுக்கு முன்ஜாமீன்

கதிராமங்கலம் போராட்டத்தில் அனுமதியின்றி பங்கேற்ற வழக்கில் திரைப்பட இயக்குநர் கௌதமனுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :5 ஜூன் 2018, 12:12 am

DIN

கதிராமங்கலம் போராட்டத்தில் அனுமதியின்றி பங்கேற்ற வழக்கில் திரைப்பட இயக்குநர் கௌதமனுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திரைப்பட இயக்குநர் கவுதமன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் மே 19 ஆம் தேதி முன் அனுமதியின்றி கலந்து கொண்டதாக என் மீது தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன். இந்த வழக்கு தொடர்பாக பந்தநல்லூர் போலீஸார் என்னை கைது செய்ய தேடி வருகின்றனர். எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இயக்குநர் கவுதமனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.