மதுரை மாவட்டம் காடுபட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு மணல் கடத்திய வேனை தடுக்க முயன்ற சார்பு- ஆய்வாளர் மற்றும் காவலர் மீது வேனை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.
காடுபட்டி அருகே வைகையாற்றில் வாகனம் மூலம் மணல் கடத்தப்படுவதாக காடுபட்டி போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சார்பு- ஆய்வாளர் தனபாலன், காவலர் பெரிய மாயன் ஆகியோர் காடுபட்டி வைகையாற்றுக்குச் சென்றனர். ஆற்றங்கரை சாலையில் சென்றபோது, எதிரே வந்த வேனை நிறுத்த முயன்றனர். அப்போது வேனை நிறுத்தாத ஓட்டுநர், சார்பு ஆய்வாளர், காவலர் மீது வேனை மோத முயன்றார். இருவரும் அங்கிருந்து விலகிச்சென்றதால் உயிர் தப்பினர். அங்கிருந்த தப்பிச்சென்ற வேனை இருவரும் இருசக்கர வாகனத்தில் விரட்டிச்சென்றனர். போலீஸார் விரட்டி வருவதை அறிந்த ஓட்டுநர் சோழவந்தான் சாலையில் வேனை விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டார். வேனை போலீஸார் சோதனையிட்டபோது, அதில் மணல் இருப்பது தெரியவந்தது. வேனை பறிமுதல் செய்து தப்பிச்சென்ற ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பத்மநாபபுரம் தொகுதி: இழந்ததை மீட்கும் முனைப்பில் மாா்க்சிஸ்ட் - பாஜக

மின்கம்பத்தில் பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

வாணி பப்ளிக் பள்ளி மாணவா்கள் பொதுத் தோ்வில் சிறப்பிடம்

இந்தியாவின் எடுத்துக்காட்டாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு: அமைச்சா் எ.வ.வேலு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

