புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் உண்டியல் வருவாய் ரூ.59 லட்சம்

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் உண்டியலில் பக்தர்கள் மார்ச் மாதம் ரூ.58.83 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

Updated On :29 மார்ச் 2018, 2:46 am

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் உண்டியலில் பக்தர்கள் மார்ச் மாதம் ரூ.58.83 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
 மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அதன் உப கோயில்களான தெப்பக்குளம் முக்தீஸ்வரர், மாரியம்மன், செல்லூர் திருவாப்புடையார், சிம்மக்கல் ஆதி சொக்கநாதர் உள்ளிட்ட கோயில்களின் உண்டியல் எண்ணிக்கைகள் மாதந்தோறும் நடத்தப்படும்.  மார்ச் மாதத்துக்கான உண்டியல்கள் எண்ணிக்கை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. திருக்கோயில் இணை ஆணையர் என்.நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில், திருக்கோயில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், பக்தர்கள் சபையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். உண்டியல்களில் ரூ.58.83 லட்சம் ரொக்கம், 427 கிராம் தங்கம், 1042 கிராம் வெள்ளிப் பொருள்கள் இருந்தன. பித்தளை பொருள்கள் 1890 கிராம், 371 வெளிநாட்டு பணத் தாள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.