எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஊரக வாழ்வாதார இயக்கம்: 2 ஆண்டுகளில் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில், கடந்த 2 ஆண்டுகளில் 6,079 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

Updated On :21 மே 2018, 1:11 am

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில், கடந்த 2 ஆண்டுகளில் 6,079 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
      மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன், கிராமப் பகுதிகளின் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புற மக்களின் வறுமையைப் போக்கி, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே ஊரக வாழ்வாதார இயக்கத்தின் நோக்கமாகும்.
    இதனடிப்படையில், ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு,  அவற்றின் மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 
மேலும், மகளிர், இளைஞர் சுயஉதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்குப் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
      ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. 
கடந்த 2016-17 ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் மொத்தம் 11,164 பேர் பங்கேற்றனர். இவர்களில், 3,864  பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
    அதைத் தொடர்ந்து, நிகழாண்டிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 
இதில், மாவட்ட அளவில் நடத்தப்பட்ட முகாமில் 1,076 பேரும், வட்டார அளவில் நடத்தப்பட்ட முகாம்களில் 1,139 பேரும் பணி 
நியமன ஆணைகள் பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.