திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்துள்ள சித்தையன்கோட்டை பகுதியில் 2 அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி உள்பட 2 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
தேனியிலிருந்து பழனி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும், திருப்பூரிலிருந்து தேனிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அடுத்துள்ள வீரசிக்கம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மோதி விபத்துக்குள்ளாகின.
இதில், பழனி நோக்கி வந்த அரசு பேருந்து,ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் பலத்த சேதமடைந்தது. இதில் அப்பேருந்தில் பயணித்த, தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியைச் சேர்ந்த தெய்வநாதன் மகள் ருத்ரா(6) மற்றும் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த பவளக்கொடி, அமராவதி, விஜயராணி உள்பட 18 பேர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பவளக்கொடி என்பவர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். விபத்து குறித்து செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆடை தொழிற்சாலையில் மோதல்: சக ஊழியரை கொலை செய்த நபா் கைது

நெல்லை அருகே பெண் வெட்டிக் கொலை

காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்றுவந்த இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு

லாட்டரி விற்பனை: 3 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


