அவனியாபுரம் நல்லதங்காள் ஊருணியை மாநகராட்சி ஊழியர்களுடன் மக்கள் நீதி மையம் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சுத்தப்படுத்தினர்.
அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் நல்லதங்காள் ஊருணி உள்ளது. இந்த ஊருணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மைப் படுத்தப்படாமல், குப்பைகளால் மாசடைந்து சுற்றுப்புற சுகாதாரமின்றி இருந்தது. இதனால் துர்நாற்றம் அதிகரித்து தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்தது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்பவர்கள் மாநகராட்சியினரிடம் ஊருணியை சுத்தப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியினர், மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் சுமார் 3 டன் அளவிலான குப்பைகள் ஊருணியிலிருந்து அகற்றப்பட்டன.
தூய்மைப் பணியில் மக்கள் நீதி மையம் கட்சி மேற்கு மாவட்ட செயலர் மணி, நிர்வாகிகள்
கிருஷ்ணகுமார், சரவணன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய பிரதேச கல்வி சமூக அலுவலகத்தில் சோதனை: நகை, ரொக்கம் பறிமுதல்!

வீழ்ச்சியடையும் தேங்காய் விலை! அரசு என்ன செய்யப் போகிறது?

விஜய் பிறந்தநாள் புகைப்படம்! த்ரிஷா பதிவால் புகழடைந்த கேக் வகைகள்!

விஜய் பிறந்த நாள்! த்ரிஷா பகிர்ந்தது ஏஐ படமா?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


