
மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 54 ஆம் மாணவர் மன்றத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் சூ.வானதி தலைமை வகித்துப் பேசுகையில் மாணவியரின் முழுமையான வளர்ச்சியில் மாணவர் மன்றப் பொறுப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றார்.
மாணவர் மன்றப் பொறுப்பாளர்கள் அவரவர் பொறுப்புகளை ஏற்கும் வகையில், சிறப்பு விருந்தினரும், மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை
இயக்குநருமான பொ.அம்பலவாணன் பதக்கங்களை வழங்கினார்.
அவர் தமது சிறப்புரையில், மாணவியர் இயற்கை வளங்களை காக்க முன்வரவேண்டும். நேரம் தவறாமை, ஒழுக்கம் பிறழாமை, சேவை ஆகியவற்றில் மாணவியர் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றார்.
கல்லூரி மாணவர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் விளக்கு ஏந்தியபடி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மன்றத் தலைவர் ரோகிணி ஏற்புரையாற்றினார். ஆங்கிலத்துறை தலைவரும், பேரவை பொறுப்பாசிரியருமான மோ.அமலா வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




