/

இம்மையில் நன்மை தருவார் கோயிலில் ஆக.4 இல் உழவாரப் பணி

தென் கயிலாய பக்திப் பேரவை சார்பில் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் ஆகஸ்ட் 4-ஆம்

Updated On :2 ஆகஸ்ட் 2019, 3:30 am

தென் கயிலாய பக்திப் பேரவை சார்பில் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உழவாரப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென் கயிலாய பக்திப் பேரவை தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களில் உழவாரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக அதிகம் கவனிக்கப்படாமல் இருக்கும் சிறு கோயில்களில் உழவாரப் பணிகளை செய்து வருகிறது. 
இதன் தொடர்ச்சியாக மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் உழவாரப் பணிகளை ஆகஸ்ட் 4-ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள், சிவாங்கா சாதகர்கள், பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த உழவாரப்பணியில் பங்கேற்க உள்ள பக்தர்கள் 99427-95319, 94437-07250 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.