திருமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருமங்கலம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த செளந்திரபாண்டியன் மனைவி ரமணி(55). இவர் விருதுநகரில் உள்ள மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மீண்டும் திருமங்கலம் வந்துள்ளார். பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து செல்லும்போது ராஜாஜி சிலை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ரமணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








