நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கிரானைட் முறைகேடு வழக்குகள் விசாரணை மார்ச்க்கு ஒத்திவைப்பு

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோத கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகள் விசாரணையை வரும் மார்ச்

Updated On :24 ஜனவரி 2019, 2:40 am IST

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோத கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்குகள் விசாரணையை வரும் மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்து மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம் புதன்கழமை உத்தரவிட்டது.
மேலூர் வட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், பாசன கண்மாய்கள், ஊருணிகள் தமழ்நாடு கனிமவள நிறுவனத்தின் மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டிக் கடத்தியது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மேலூர் நீதித்துறை நடுவர்மன்றத்தில் 178 வழக்குகள் தாக்கல்செய்துள்ளார். அதில் 25 வழக்குகள் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.
இதில், கீழையூர் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கிவைத்துள்ள பலகோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் குறித்து கிராமநிர்வாக அலுவலர் அழகுபாண்டி சாட்சியமளித்தார். கிரானைட் முறைகேடுகளுக்கான அரசு சிறப்பு வழக்குஞர் ஷீலா ஆஜரானார். அதைத்தொடர்ந்து இந்த வழக்குகளின் விசாரணையை வரும் மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் பழனிவேலு உத்தரவிட்டார்.
கிரானைட் முறைகேடு தொடர்பாக போலீஸார் தொடர்ந்துள்ள 21 வழக்குகளும் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கு விசாரணையின்போது, முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி ஆஜரானார். ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மீதான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி ஆஜராகவில்லை. அவருக்கு சம்மன் சமர்ப்பிக்கப்படவில்லை என நீதிஅதையடுத்து, வழக்கு விசாரணையை மார்ச் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.