குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நேதாஜி பிறந்தநாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி, மதுரை ஜான்சிராணி

Updated On :24 ஜனவரி 2019, 2:39 am IST

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி, மதுரை ஜான்சிராணி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக் குழு சார்பில், நேதாஜி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஜான்சிராணி பூங்காவில் உள்ள சிலைக்கு டாக்டர் கோ.பாஸ்கரராஜன் மாலை அணிவித்து, நேதாஜி குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் வே.சுவாமிநாதன், நிர்வாகிகள் வே.கதிரேசன், பூவநாதன், லோகநாதன், யோகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் க.ஜான்மோசஸ் தலைமையில் அக் கட்சியினர் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சியின் புறநகர் மாவட்டத் தலைவர் கே.பாக்கியத்தேவர், நிர்வாகிகள் ஜெயப்பிரகாசம், பி.சேகர், மா.பிச்சை உள்ளிட்ட ப லர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டியில்: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முன் வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் உருவப் படத்துக்கு  அகில இந்திய பார்வர்டு பிளாக் (பசும்பொன்) கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு புறநகர் மாவட்ட செயலர் மணிகண்டன் தலைமை வகித்தார். இதில், மாநில பொதுச்செயலர் மகேஷ்வரன், மாநிலத்தலைவர் நவமணி, பொருளாளர் போடி காசிராஜன், ஒன்றியசெயலாளர் பிரபு, தலைவர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.