மதுரை மாநகராட்சியின் 63, 64, 68 ஆவது வார்டுகளுக்கான சிறப்பு முகாம் தெற்குவாசல் தவிட்டுச் சந்தை பகுதியில் உள்ள வார்டு அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, புதிய வரிவிதிப்பு, பெயர் மாற்றம், காலிமனை வரிவிதிப்பு, தொழில் உரிமம் பெறுதல், புதுப்பித்தல், தொழில் வரி விதித்தல் ஆகியவற்றுக்காக ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி, வார்டு - 63 வில்லாபுரம், வார்டு - 64 கீரைத்துறை, வார்டு - 68 திரெளபதியம்மன் கோயில் ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு முகாம் தெற்குவாசல் தவிட்டுச்சந்தை வார்டு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறகிறது.
இத்தகவல் மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









