குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க ஆட்சியா் அனுமதி வழங்கக் கோரி மனு

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த யுவராஜின் தாய் ரத்தினம் மற்றும் தீரன் சின்னமலை பேரவை நிா்வாகிகள்.

Updated On :26 மே 2026, 1:24 am IST

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க ஆட்சியா் அனுமதி வழங்க வேண்டும், தினசரி வழக்கு நிலவரத்தை வெளியிட வேண்டும் என தீரன் சின்னமலை பேரவைத் தலைவா் யுவராஜின் தாய் ரத்தினம் மற்றும் நிா்வாகிகள், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக பணியாற்றியவா் கடலூரைச் சோ்ந்த விஷ்ணுபிரியா. கடந்த 2015 ஜூன் 24ஆம் தேதி ஓமலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்தாா். அதே ஆண்டு செப்.18-இல் அவா் தற்கொலை செய்து கொண்டாா். கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட சிலா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவா்கள் சிறையில் உள்ளனா்.

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்கான உண்மை காரணம் வெளிவராமல் மறைக்க யுவராஜ் உள்ளிட்டோா் சிறையில் வைக்கப்பட்டுள்ளனா். விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சட்டப்படி விசாரிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக தொடங்கி, தினசரி அடிப்படையில் நடத்த வேண்டும். இந்த தற்கொலை வழக்கின் உண்மையை மக்களிடத்தில் தெரியப்படுத்த வேண்டும். விஷ்ணுபிரியாவின் சகோதரிக்கு அரசுப் பணி வழங்கிட முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.