சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி, மதுரை ஜான்சிராணி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக் குழு சார்பில், நேதாஜி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஜான்சிராணி பூங்காவில் உள்ள சிலைக்கு டாக்டர் கோ.பாஸ்கரராஜன் மாலை அணிவித்து, நேதாஜி குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் வே.சுவாமிநாதன், நிர்வாகிகள் வே.கதிரேசன், பூவநாதன், லோகநாதன், யோகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் க.ஜான்மோசஸ் தலைமையில் அக் கட்சியினர் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சியின் புறநகர் மாவட்டத் தலைவர் கே.பாக்கியத்தேவர், நிர்வாகிகள் ஜெயப்பிரகாசம், பி.சேகர், மா.பிச்சை உள்ளிட்ட ப லர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டியில்: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முன் வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் உருவப் படத்துக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் (பசும்பொன்) கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு புறநகர் மாவட்ட செயலர் மணிகண்டன் தலைமை வகித்தார். இதில், மாநில பொதுச்செயலர் மகேஷ்வரன், மாநிலத்தலைவர் நவமணி, பொருளாளர் போடி காசிராஜன், ஒன்றியசெயலாளர் பிரபு, தலைவர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








