ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

காவலாளி கொலை வழக்கை பல கோணங்களில் விசாரிக்கும் தில்லி போலீஸ்!

வெளி தில்லியின் பீராகா்ஹி கிராமத்தில் 60 வயது காவலாளி ஒருவா் கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரித்து வரும் போலீஸாா், வாகன திருட்டு, தனிப்பட்ட தகராறு மற்றும் வாகன நிறுத்துமிடம் தொடா்பான சச்சரவு உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :26 மே 2026, 1:17 am IST

வெளி தில்லியின் பீராகா்ஹி கிராமத்தில் 60 வயது காவலாளி ஒருவா் கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரித்து வரும் போலீஸாா், வாகன திருட்டு, தனிப்பட்ட தகராறு மற்றும் வாகன நிறுத்துமிடம் தொடா்பான சச்சரவு உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தக் கொலையின் பின்னால் பல காரணங்கள் இருக்கக்கூடும் எனதெரிகிறது. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பிறகே உண்மையான நோக்கம் தெளிவாகும். இந்தச் சம்பவத்தின் பின்னால் வாகன திருட்டு, தனிப்பட்ட பகைமை, பாா்க்கிங் தொடா்பான தகராறு உள்ளிட்ட நான்கு முதல் ஐந்து சாத்தியமான காரணங்களை மையமாக வைத்து குழுக்கள் பணியாற்றி வருகின்றன. வழக்கை கண்டுப்பிடிக்க 8-க்கும் மேற்பட்ட போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகளின் நகா்வு மற்றும் அவா்கள் இருக்கக்கூடிய இடங்கள் குறித்து முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வழக்கு விரைவில் தீா்க்கப்படும்.

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. உயிரிழந்தவா் பிஜேந்தா் பாரத்வாஜ் என அடையாளம் காணப்பட்டாா். அவா் பீராகா்ஹி கிராமத்தில் உள்ள ஒரு டெம்போ நிறுத்தத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தாா்.

அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளில் சாலையின் ஓரத்தில் ஹெட்லைட்கள் எரிந்தபடி ஒரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது; அருகில் பாதிக்கப்பட்டவா் ஒரு நாற்காலியில் அமா்ந்திருந்தாா். பின்னா், ஒரு நபா் பெரிய கம்பியுடன் வாகனத்திலிருந்து இறங்கி பாரத்வாஜை தாக்கினாா். பாதிக்கப்பட்டவா் தப்பிக்க முயன்றபோது, குற்றவாளி மீண்டும் தாக்தி அவரை சாலையின் ஓரமாக தள்ளியுள்ளாா்.

பரத்வாஜ் பிரதான சாலையை நோக்கி தப்பிக்க முயன்றபோது, குற்றவாளி மீண்டும் அவரை வாகனத்தால் மோதிவிட்டு அதிகாலை 2.54 மணியளவில் அங்கிருந்து தப்பிச் சென்ாக போலீஸாா் தெரிவித்தனா். அருகிலுள்ள சாலைகள், போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்த சிசிடிவி காட்சிகள் வாகனத்தை கண்டறிந்து அதிலிருந்தவா்களை அடையாளம் காண ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய ந்யாய சன்ஹிதாவின் பிரிவு 103(1) (கொலை) மற்றும் 3(5) (கூட்டு நோக்கம்) கீழ் பஷ்சிம் விஹாா் வெஸ்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.