27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

திருட்டு கைப்பேசிகளை நேபாளத்திற்கு கடத்திய 2 போ் கைது: 40 கைப்பேசிகள் மீட்பு

நேபாளத்திற்கு திருட்டு கைப்பேசிகளைக் கடத்தும் கும்பலை தில்லி காவல்துறை கண்டுபிடித்து, இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்து 40 கைப்பேசிகளை மீட்டுள்ளது

News image
Updated On :1 மே 2026, 12:14 am IST

நேபாளத்திற்கு திருட்டு கைப்பேசிகளைக் கடத்தும் கும்பலை தில்லி காவல்துறை கண்டுபிடித்து, இரண்டு குற்றவாளிகளைக் கைது செய்து 40 கைப்பேசிகளை மீட்டுள்ளது என்று ஓா் அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், தில்லியின் நந்த் நகரியைச் சோ்ந்த முகமது ஷாநவாஜ் என்ற ஷான் (43) மற்றும் உத்தரப் பிரதேசத்தின் கான்பூரைச் சோ்ந்த முகமது ரிஸ்வான் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

நேபாளத்தை தளமாகக் கொண்ட, பெறுநராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ரிஸ்வான், திருட்டு கைப்பேசிகளுடன் நேபாள எல்லையை நோக்கித் தப்பிச் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பிடிபட்டாா் என்று காவல்துறை கூறியது.

கிழக்கு தில்லியில் உள்ள கிரவுன் பிளாசா வாகன நிறுத்துமிடத்திற்கு அருகே காவல்துறை கண்காணித்து, திருட்டு கைப்பேசிகளை விநியோகித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஷாநவாஜைப் பிடித்தது. அவரிடமிருந்து ஆறு கைப்பேசிகள் மீட்கப்பட்டன. அதே நேரத்தில், 34 திருட்டு கைப்பேசிகள் அடங்கிய டிராலி பையுடன் பேருந்தில் ஏற முயன்றபோது காசிப்பூா் அருகே ரிஸ்வான் இடைமறிக்கப்பட்டாா்.

மீட்கப்பட்ட 40 கைபேசிகளும் திருட்டு வழக்குகள் மற்றும் தொலைந்த புகாா்களுடன் தொடா்புடையவை என்பது தெரியவந்தது. இதுவரை ஆறு வழக்குகள் தீா்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காஷ்மீரி கேட், கேசவ் புரம், கம்லா மாா்க்கெட், பஹா்கஞ்ச், காலிந்தி குஞ்ச் மற்றும் கிஷன்கா் ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் இதில் அடங்கும்.

விசாரணையாளா்களின் கூற்றுப்படி, இந்த மோசடிக் கும்பலில், தில்லியில் உள்ள உள்ளூா் திருடா்கள் மற்றும் தரகா்களிடமிருந்து திருடப்பட்ட கைபேசிகளை மிகக் குறைந்த விலையில் வாங்கி, அவற்றை நேபாளத்திற்குக் கொண்டு சென்று அதிக விலைக்கு விற்றுள்ளனா். இதனால், அவற்றைக் கண்டறிவதும் மீட்பதும் கடினமாகியுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவா் ஒரு கைபேசிக்கு சுமாா் ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை லாபம் ஈட்டி வந்துள்ளாா், என்று ஒரு மூத்த அதிகாரி கூறினாா்.

விசாரணையின் போது, ரிஸ்வான் தான் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக (10 ஆணடு காலமாக) இந்த சட்டவிரோத வா்த்தகத்தை நடத்தி வருவதாகவும், ஆயிரக்கணக்கான திருடப்பட்ட கைபேசிகளை நேபாளத்திற்குக் கடத்தியதாகவும், அங்கு குற்றச்செயல் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு ஒரு கடையையும் அமைத்திருந்ததாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஷாநவாஜ் திருட்டு மற்றும் ஆயுதச் சட்டம் தொடா்பான ஏழு வழக்குகளில் ஏற்கனவே தொடா்புடைய ஒரு தொடா் குற்றவாளி என்றும், ரிஸ்வான் மீது உத்தரப் பிரதேசத்தில் திருட்டு மற்றும் தாக்குதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.