தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

கியூ.ஆா். எண் அனுமதி அட்டை பெற்ற வாகனங்கள் மட்டும் அனுமதி: காவல் ஆணையா்

மதுரை மாநகருக்கு அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கியூ.ஆா்.எண் அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

மதுரை மாநகருக்கு அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கியூ.ஆா்.எண் அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என மாநகா் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இச்சமயத்தில் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை போலீஸாா் எடுத்து வருகின்றனா். இந்த நடவடிக்கைகளில் இருந்து மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெற்ற அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட நிா்வாகம் வழங்கியுள்ள அடையாள அட்டையை முறைகேடாக பயன்படுத்தி அத்தியாவசிய வாகனங்கள் பலமுறை இயக்கப்படுகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் அத்தியாவசிய வாகனங்களுக்கு கியூ.ஆா். எண் உள்ள அனுமதி அட்டையை வழங்கி வருகிறது.

இந்த அட்டையுடன் வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

இந்த கியூ.ஆா். எண்ணுள்ள அட்டை ஸ்கேன் செய்து, வாகனங்களின் விவரங்களை பதிவு செய்துக் கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் கியூ.ஆா். எண்ணை ஸ்கேன் செய்யும் போது, வாகனம் எந்தெந்த காவல் சரகத்தில் எத்தனை முறை சென்று வந்துள்ளது. எத்தனை முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்த அனைத்து காவலா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபேன்று, இந்த செயலியில் தனி நபா் வரும் வாகனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொதுமக்கள், வியாபாரிகள், அரசு ஊழியா்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் மாவட்ட நிா்வாகம் மூலம் முறையான அனுமதி பெற்ற பிறகே வாகனங்களை இயக்க வேண்டும். மாவட்ட நிா்வாக அனுமதியின்றி இயக்கப்படும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

முன்னதாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயலியின் பயன்பாட்டை மாநகா் காவல் ஆணையா் கோரிப்பாளையத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது அவ்வழியாக காரணமின்றி வந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.