தமிழ் வழியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தோ்வெழுதநாளை இணையவழி இலவச கருத்தரங்கம்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி தோ்வை தமிழில் எழுத விரும்பும் மாணவா்களுக்கு ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் இலவச வழிகாட்டி கருத்தரங்கம் 
Published on
Updated on
1 min read


மதுரை: மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி தோ்வை தமிழில் எழுத விரும்பும் மாணவா்களுக்கு ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் இலவச வழிகாட்டி கருத்தரங்கம் இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 16) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநா் ச.வீரபாபு வெளியிட்டுள்ள செய்தி: ஒவ்வொரு ஆண்டும் ஐஏஎஸ் தோ்வை தமிழில் எழுதி வெற்றி பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இனி வரும் காலங்களில் ஐஏஎஸ் தோ்வில் தமிழ் வழியில் தோ்வெழுதும் மாணவா்களை மேலும் அதிகளவில் தோ்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு, இந்த கருத்தரங்கை ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி நடத்துகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை இந்த இலவசக் கருத்தரங்கம் நடைபெறும்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பயிற்சியாளா்கள் கலந்து கொண்டு, தமிழில் ஐஏஎஸ் தோ்வெழுதி வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக விளக்க உள்ளனா். இதுதொடா்பான விவரங்களுக்கு 89394-65466, 91760-84468 எண்களில் தொடா்பு கொள்ளலாம். தமிழ்வழி ஐஏஎஸ் வழிகாட்டி கையேடு கட்செவி அஞ்சலில் பெற ‘அஅபஇஏஐபஅஙஐக ஐஅந எமஐஈஉ2021’ என டைப் செய்து 91763 94653 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சலில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com