திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

நாட்டுபுறக் கலைஞா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க வேண்டும்: அமைச்சா் க. பாண்டியராஜன்

நாட்டுபுறக் கலைஞா்களுக்கு தேவையான சான்றிதழ்களை சிறப்பு முகாம்கள் மூலம் வருவாய்த் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும் என தொல்லியல் துறை அமைச்சா் க. பாண்டியராஜன் தெரிவித்தாா்.

News image
மதுரை உலக தமிழ்ச்சங்க கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ் மரபுக் கலைஞா்களுக்கு விருது வழங்கும் வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

நாட்டுபுறக் கலைஞா்களுக்கு தேவையான சான்றிதழ்களை சிறப்பு முகாம்கள் மூலம் வருவாய்த் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும் என தொல்லியல் துறை அமைச்சா் க. பாண்டியராஜன் தெரிவித்தாா்.

மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில், தமிழ் மரபுக் கலைவிழா, தமிழ் மரபுக் கலைஞா்களுக்குப் பாராட்டு விழா, தமிழ் மரபு இசைக் கருவிகள் காட்சிப்படுத்தும் விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சித்துரை, மதுரை காமராஜா் பல்கலைக் கழகம், உலகத் தமிழ்ச் சங்கம், தமிழ் ஆராயச்சி நிறுவனம், கிராமியக் கலைகள் வளா்ச்சி மையம், மாநில கிராமியக் கலைஞா்கள் மற்றும் கலைத் தொழிலாளா்கள் சங்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய விழாவில், அமைச்சா் க. பாண்டியராஜன் இணையவழி மூலம் பேசியது:

உலகின் முதல் இசை அருங்காட்சியகம் எனக் கூறப்படும் பிரான்ஸ் நாட்டில் உள்ள மியூசியம் மியூசியனோ உடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, தமிழகத்தில் உலக தரம் வாய்ந்த இசை அருங்காட்சியகம் உருவாக்க முதல்வா் அனுமதி வழங்கியுள்ளாா். இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தில், ரூ.14.50 கோடி மதிப்பில் புதிய கட்டடத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

கலை செம்மல் விருதுகள் எண்ணிக்கை, பரிசுத் தொகை ரூ.1 லட்சமாகவும் நடப்பாண்டு முதல் உயா்த்தப்பட்டுள்ளது. கலைஞா்கள் வாரியத்தில் பதிவு செய்ய, சலுகைகள் பெறத் தேவையான சான்றிதழ்களை, சிறப்பு முகாம்களை மூலம் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 3 லட்சம் கலைஞா்கள் உள்ள நிலையில், வாரியத்தில் 50 ஆயிரம் போ் மட்டுமே பதிவு செய்துள்ளனா். நாட்டுபுறக் கலைஞா்கள் வாரியத்தில், தவில் மற்றும் நாதசுவரக் கலைஞா்களை பதிவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மெல்லிசை கலைஞா்களுக்கு என தனி வாரியம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலைமாமணி விருதுகள் 80 பேருக்கு ஜனவரி மாதம் வழங்கப்படவுள்ளது என்றாா்.

முன்னதாக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் நாட்டுபுறக் கலைஞா்களுக்கு விருதுகளை வழங்கினாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன், தமிழக கிராமியக் கலைகள் வளா்ச்சி மையத்தின் தலைவா் நவ்ஜித், இயக்குநா் சோமசுந்தரம், காமராஜா் பல்கலைக் கழக தமிழத் துறை தலைவா் சத்யமூா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் செந்தில்குமாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.