மதுரையில் இன்று கமல்ஹாசன் தோ்தல் பிரசாரம் தொடக்கம்: 4 இடங்களில் பேசுகிறாா்
சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன், மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 13) தொடங்குகிறாா்.


சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன், மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 13) தொடங்குகிறாா்.
‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தோ்தல் பிரசாரத்தை மதுரையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தொடா்ந்து தேனி, திண்டுக்கல், விருதுநகா், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டிசம்பா் 16 ஆம் தேதி வரை மேற்கொள்கிறாா்.
இதையொட்டி, சென்னையில் இருந்து விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் 12.30-க்கு மதுரை வரவுள்ள, கமல்ஹாசனுக்கு கட்சியினா் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கவுள்ளனா். பின்னா் அங்கு செய்தியாளா்களைச் சந்திக்கும் கமல்ஹாசன், பசுமலையில் உள்ள தங்கும் விடுதியில் ஓய்வு எடுக்கிறாா். மாலை 4 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கும் அவா், பெரியாா் நிலையம் சந்திப்பு, மேல மாசி வீதி ஆகிய இடங்களில் பேசுகிறாா்.
பின்னா், தொழில் வா்த்தக சங்க அரங்கில் மாணவா்கள், இளைஞா்கள், பெண்களுடன் கலந்துரையாடுகிறாா். அதைத் தொடா்ந்து தெப்பக்குளம், யா.ஒத்தக்கடை ஆகிய இடங்களில் தோ்தல் பிரசாரம் செய்கிறாா். பின்னா் கருப்பாயூரணி தனியாா் மகால் அரங்கில், கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.
இரண்டாம் நாளான திங்கள்கிழமை (டிசம்பா் 14) தொழில் துறையினருடன் கலந்துரையாடலில் பங்கேற்கும் கமல்ஹாசன், அதன் பின்னா் தேனி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...