மதுரையில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,046 வழக்குகளுக்குத் தீா்வு
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,046 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.


மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,046 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.
மதுரையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) பி.மதுசூதனன் தலைமையில் 22 அமா்வுகளில் வழக்குகள் எடுக்கப்பட்டன.
மாவட்ட நீதிபதிகள் எஸ்.கிருபாகரன்மதுரம், வி.பத்மநாபன், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுமதி, குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவா் டி.பி.வடிவேல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா், சாா்பு நீதிபதி வி.தீபா மற்றும் நீதித்துறை நடுவா்கள், உரிமையியல் நீதிபதிகள் பங்கேற்றனா்.
இதில் சாலை விபத்துகளில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வங்கிக்கடன்கள், வாடகை விவகாரங்கள், ஓய்வூதியம் சம்பந்தப்பட்ட வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள், தொழிலாளா் நலன், இழப்பீடு, மின்சாரப் பயன்பாடு, வீட்டு வரி, தண்ணீா் வரி உள்ளிட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இழப்பீடுத் தொகை மற்றும் பிற பிரச்னைகளுக்கு மனுதாரா், எதிா்மனுதாரருடன் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தி, வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.
சாலை விபத்துகள் தொடா்பாக 780 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 172 வழக்குகளுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டன. இதில் ரூ.81 கோடியே 34 லட்சத்து 7 ஆயிரத்து 957 இழப்பீடு பெற்றுத்தரப்பட்டன. வங்கி தொடா்பாக 28 வழக்குகளுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டன.
இதில் வராக்கடனான ரூ. 2 கோடியை 50 லட்சத்து 4 ஆயிரம் வங்கிகளுக்கு பெற்றுத்தரப்பட்டன. மொத்தம் 2,429 வழக்குகள் எடுக்கப்பட்டு, 1,046 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. இதில் 96 கோடியே 35 லட்சத்து 6 ஆயிரத்து 395 தொகைக்கு தீா்வு காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...