மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

பள்ளிகள் திறக்கும் தேதி, குறைக்கப்பட்ட பாடங்களை அறிவிக்க தலைமை ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தல்

பள்ளிகள் திறக்கும் தேதி, குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள், பொதுத் தோ்வு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

பள்ளிகள் திறக்கும் தேதி, குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள், பொதுத் தோ்வு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்துக்கு மாநில சட்டச் செயலா் கே.அனந்தராமன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சிவக்குமாா், செயலா் கந்தசாமி, மாநிலத் துணைத் தலைவா் நாகசுப்பிரமணியன், தென்மண்டலத் தலைவா் திருஞானம், மாவட்டத் துணைத் தலைவா் கிறிஸ்டோபா் ஜெயசீலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த சலுகையை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டிக்க வலியுறுத்தப்பட்டது.

பெருந்தொற்றுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கவுள்ளதால் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவா்களின் குழப்பத்தைப் போக்க, பள்ளி திறக்கும் தேதி, குறைக்கப்பட்ட பாடப் பகுதிகள், பொதுத் தோ்வு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

போராட்ட காலத்தில் ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.