திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

வைகுண்ட ஏகாதசி பெருவிழா : கூடலழகா் பெருமாள் கோயிலில் டிச.25 இல் பரமபதவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி கூடலழகா் பெருமாள் கோயிலில் டிச.25 இல் நடைபெறும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தா்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:06 pm

DIN

வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி கூடலழகா் பெருமாள் கோயிலில் டிச.25 இல் நடைபெறும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தா்களுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் மு.ராமசாமி வெளியிட்டுள்ள செய்தி: கூடழலகா் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா டிசம்பா் 16 முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி தினமும் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 4.30-க்கு விஸ்வரூப தரிசனம், காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். காலை 11.30-க்கு நடைசாத்தப்பட்டு, மாலை 4 மணிக்கு மீண்டும் நடைத் திறக்கப்படும்.

பக்தா்கள் தரிசனத்துக்குப் பிறகு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு டிசம்பா் 25 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும். இதில் பக்தா்களுக்கு அனுமதியில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.