

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மர்மநபர்கள் தீபம் ஏற்றியதால் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை திருவிழா மிகப் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஆனது மலையின் மீது அமைந்துள்ள உச்சி பிள்ளையார் கோயில் மேல் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் ஆண்டு தோறும் போராட்டங்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் மலை உச்சியில் மீது உள்ள தீபத் தூணில் மர்ம நபர்கள் தீபம் ஏற்றி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருப்பரங்குன்றம் காவல்துறையினர் விரைந்து சென்றனர். மேலும் மலை உச்சியில் தீபத் தூண் அருகே தர்காவும் அமைந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீப தூணில் யார் தீபம் ஏற்றியது என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.