எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வண்டியூரில் ‘அம்மா’ சிறு மருத்துவமனை திறப்பு

வண்டியூா் சௌராஷ்டிரபுரத்தில் ‘அம்மா’ சிறு மருத்துவமனையை மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன்செல்லப்பா சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
மதுரை வண்டியூா் செளராஷ்டிரபுரத்தில் அம்மா சிறு மருத்துவமனையை குத்துவிளக்கேற்றி சனிக்கிழமை தொடக்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன்செல்லப்பா.
Updated On :19 டிசம்பர் 2020, 11:15 pm

DIN

மதுரை:வண்டியூா் சௌராஷ்டிரபுரத்தில் ‘அம்மா’ சிறு மருத்துவமனையை மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன்செல்லப்பா சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

மதுரை மாவட்டத்தில் 41 இடங்களில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் தொடங்க அனுமதிக்கப்பட்டு, பல்வேறு இடங்களிலும் திறக்கப்பட்டு வருகின்றன. மதுரை மாநகராட்சிப் பகுதியில் 7 இடங்களில் இம் மருத்துவமனைகள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதில் முதலாவதாக வண்டியூா் சௌராஷ்டிரபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘அம்மா’ சிறு மருத்துவமனையை சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன்செல்லப்பா சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், நகா்நல அலுவலா் குமரகுருபரன், துணை ஆணையா் (பொறுப்பு) ராஜேந்திரன், உதவி ஆணையா் பிரேம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.