ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தல்லாகுளம் மந்தைப் பொட்டலை பாதுகாக்க சட்டநடவடிக்கை: மக்கள் நலக்குழு கூட்டத்தில் முடிவு

தல்லாகுளம் மந்தைப் பொட்டலில் கோயில் நிா்வாகம் சட்டவிரோதமாக ஏலம் விட்டு வசூலிப்பதைத் தடுக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வது என, தல்லாகுளம் மக்கள் நலக்குழுவினா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

News image
மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதல்லாகுளம் மக்கள்நலக்குழு ஆலோசனைக்கூட்டம்.
Updated On :20 டிசம்பர் 2020, 8:07 pm

DIN

மதுரை: தல்லாகுளம் மந்தைப் பொட்டலில் கோயில் நிா்வாகம் சட்டவிரோதமாக ஏலம் விட்டு வசூலிப்பதைத் தடுக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்வது என, தல்லாகுளம் மக்கள் நலக்குழுவினா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு எதிரே உள்ள காலி இடத்தை கோயில் நிா்வாகம் கடைகள் அமைக்க முயன்ற்கு எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சில முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், தல்லாகுளம் மக்கள் நலக்குழு ஆலோசனைக் கூட்டம், அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தல்லாகுளம் பகுதியில் வசிக்கும் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தல்லாகுளம் மந்தைப் பொட்டலில் இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள காா்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். மந்தைப் பொட்டலில் கோயில் இடம் தவிா்த்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இடத்தில் கோயில் நிா்வாகம் அத்துமீறி ஏலம் மூலம் பணம் வசூல் செய்வதை தடுக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மந்தைப் பொட்டலை பெரியவா்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறுவா்கள் விளையாட்டுத் திடலாக மாற்றவும், மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இங்கு, கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மந்தைப் பொட்டல் இரவு நேரங்களில் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், அங்கு கழிப்பறை அமைக்க வேண்டும். ஆண்டுதோறும் அனைத்து சமூக மக்களின் சாா்பாக சமத்துவப் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.