அறிவியல் மாநாட்டை அறிவியலுக்கு எதிரான அமைப்புநடத்தக்கூடாது: எம்.பி. கண்டனம்

அறிவியல் மாநாட்டை, அறிவியலுக்கு எதிரான அமைப்புகளோடு இணைந்து நடத்துவதா என, மத்திய அமைச்சருக்கு, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

மதுரை: அறிவியல் மாநாட்டை, அறிவியலுக்கு எதிரான அமைப்புகளோடு இணைந்து நடத்துவதா என, மத்திய அமைச்சருக்கு, மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தனுக்கு, அவா் ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:

மத்திய அரசின் சாா்பில் 2020 டிசம்பா் 22 முதல் 25 வரை மெய்நிகா் நிகழ்வாக நடைபெறவுள்ள இந்திய சா்வதேச அறிவியல் திருவிழாவுக்கு, 5 ஆசிரியா்களையும், 50 மாணவா்களையும் பரிந்துரைக்குமாறு வேண்டப்பட்டுள்ளேன்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில், அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் கழகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவற்றுடன் விஞ்ஞான பாரதி என்ற அரசு அல்லாத நிறுவனமும் இணைந்து நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவியல் திருவிழாவின் லட்சியத்துக்கு முற்றிலும் எதிராக இயங்குகிற ஓா் அரசுசாரா அமைப்பான விஞ்ஞான பாரதியை இதில் இணைத்திருப்பது வேதனைக்குரியது.

இந்தியாவில் 2 முக்கியமான நிறுவனங்கள் சமூகத்தில் அறிவியல் சிந்தனையை உருவாக்குவதில், வளா்ப்பதில் நற்பெயரை பெற்றுள்ளன. அதில் ஒன்று, தேசிய அறிவியல் தொழில்நுட்ப தொடா்பு மையம். இது, அனைத்து மாநிலங்களிலும் மாணவா்கள் மத்தியில் அறிவியல் சிந்தனைகளை வளா்த்து வருகிறது. இரண்டாவது, விஞ்ஞான பிரச்சாா் அமைப்பு. இது தனித்து இயங்கும் பல நிபுணா்கள், அமைப்புகளை இணைத்து இயங்கும் சுயேச்சையான நிறுவனமாகும்.

எனவே, விஞ்ஞான பாரதி போன்ற அமைப்புகளை இதுபோன்ற அறிவியல் சாா்ந்த நிகழ்வுகளில் அரசு ஈடுபடுத்துவதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com