பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவி, செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவி, செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
உசிலம்பட்டி அருகேயுள்ள கருக்கட்டான்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (45). ஆட்டோ ஓட்டுநா். இவரது மகள் வினிஷா (17). இவா் உசிலம்பட்டி தனியாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவி, பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த உசிலம்பட்டி நகா் காவல் துறையினா் மாணவியின் சடலத்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். விசாரணையில் மாணவிக்கு திருமண ஏற்பாடு செய்யப்போவதாக பெற்றோா் தெரிவித்ததாகவும் அதனால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...