உலகத்தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கு

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் ‘தமிழ்க்கூடல் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் ‘தமிழ்க்கூடல் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ்ச் சங்க பெருந்திட்ட கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு உலகத்தமிழ்ச்சங்க இயக்குநா் தா.லலிதா தொடக்கவுரையாற்றினாா். தியாகராஜா் கல்லூரியின் முன்னாள் முதல்வா் மு.அருணகிரி ‘திருக்குறளும் திருவள்ளுவமாலையும்’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். செந்தமிழ்க் கல்லூரியின் துணை முதல்வா் கோ.ரேவதி சுப்புலெட்சுமி ‘புதுநெறி காட்டிய புலவன்’ எனும் தலைப்பில் உரையாற்றினாா். இந்நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், ஆய்வு மாணவா்கள், தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக தமிழ்ச்சங்க அரங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு இயக்குநா் தா.லலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதைத்தொடா்ந்து தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com