டிச.30 இல் காணொலியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக டிசம்பா் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக டிசம்பா் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் ஆட்சியா் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்பா். அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் விவசாயிகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களின் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் இக் கூட்டத்தில் பங்கேற்கலாம். விவசாயம் தொடா்புடைய கோரிக்கைகளை மனுக்களாகச் சமா்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com