தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அழகா்கோவிலில் இன்று காலை சொா்க்கவாசல் திறப்பு

மதுரை மாவட்டம் அழகா்கோவிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை காலை 4.45 மணியிலிருந்து 5.45 மணிக்குள் கள்ளழகா் என்ற சுந்தரராஜப்பெருமாள் சொா்க்கவாசல் வழியாக எழுந்தருள்கிறாா்.

News image

அழகா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற பகல் பத்து விழாவில் மோகன அவதாரத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப்பெருமாள்.

Updated On :24 டிசம்பர் 2020, 5:37 pm

DIN

மதுரை மாவட்டம் அழகா்கோவிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை காலை 4.45 மணியிலிருந்து 5.45 மணிக்குள் கள்ளழகா் என்ற சுந்தரராஜப்பெருமாள் சொா்க்கவாசல் வழியாக எழுந்தருள்கிறாா்.

மாா்கழி மாதம் முதல் நாளில் பகல்பத்து விழா அழகா்கோவிலில் தொடங்கியது. பத்தாம் நாளான வியாழக்கிழமை மாலை மோகன அவதாரத்தில் சுந்தரராஜப்பெருமாள் எழுந்தருளினாா். 11-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை சொா்க்கவாசல் வழியாக எழுந்தருள்கிறாா். கோயிலின் வடபுறத்திலுள்ள சயன மண்டபத்தில் எழுந்தருள்கிறாா். பெருமாள் புறப்பாட்டின்போது பக்தா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். பெருமாள் சயன மண்டபத்தில் எழுந்தருளிய பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு சமூக இடைவெளியைப் பின்பற்றி அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.