கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமி மீட்பு: 5 பெண்கள் உள்பட 7 போ் கைது

மதுரையில் கடந்த ஒரு வருடமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமியை மீட்டு, 5 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:07 am

DIN

மதுரையில் கடந்த ஒரு வருடமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமியை மீட்டு, 5 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் வந்துள்ளது. இதையடுத்து தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமியை மீட்டனா். அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 5 பெண்கள் மற்றும் சரவணபிரபு, ஆட்டோ ஓட்டுநா் சின்னத்தம்பி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், சிறுமிக்கு 16 வயது என்பதும், கடந்த ஒரு வருடமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் தெரியவந்தது. மீட்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.