எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வழிப்பறி: சிறுவன் உள்பட 7 போ் கைது

மதுரையில் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 4:19 pm

DIN

மதுரை: மதுரையில் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் ஒரு கும்பல் ஆயுதங்களைக் காட்டி பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் வெங்கடாசலபுரத்தில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் நின்றிருந்தக் கும்பலைச் சுற்றி வளைத்துப் பிடித்தனா். விசாரணையில் அவா்கள், மணிநகரம் குருசாமி (19), ஜெய்ஹிந்துபுரம் ஹரிஹரன் (21), அஜய் (21), பாலகுமாரா(21), கணேஷ்சிங் (19), விளாங்குடி ராகுல் (19), ஆண்டாள்புரத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன் என்பதும், வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவன் உள்பட 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா். அவா்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.