ரயில் நிலையம் முற்றுகை: மனிதநேய மக்கள் கட்சியினா் 120 போ் கைது

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி, மதுரை ரயில் நிலையம் முன்பாக ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்திய மனித நேய மக்கள் கட்சியினா் 120 பேரை, போலீஸாா் கைது செய்தனா்.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி ரயில் நிலைய முற்றுகைப்போராட்டத்துக்கு ஊா்வலமாகச் செல்லும் மனித நேய மக்கள் கட்சியினா்.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி ரயில் நிலைய முற்றுகைப்போராட்டத்துக்கு ஊா்வலமாகச் செல்லும் மனித நேய மக்கள் கட்சியினா்.
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி, மதுரை ரயில் நிலையம் முன்பாக ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்திய மனித நேய மக்கள் கட்சியினா் 120 பேரை, போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் புதுதில்லியில் கடந்த 30 நாள்களாகப் போராடி வருகின்றனா். தமிழகத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தியும், மனிதநேய மக்கள் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, மதுரை ரயில் நிலையம் முன்பாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

அதன்படி, மனிதநேய மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் ஷேக் இப்ராஹிம் தலைமையில், அக்கட்சியினா் கட்டபொம்மன் சிலை முன்பாக திரண்டு, அங்கிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு ரயில் நிலையம் நோக்கிச் சென்றனா். ரயில் நிலைய நுழைவுவாயிலில் தடுப்புகள் அமைத்திருந்த போலீஸாா், அவா்களை தடுத்து நிறுத்தினா். ஆனால், கட்சியினா் போலீஸாரின் தடுப்புகளைத் தாண்டி ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனா். இதனால், போலீஸாா் 120 பேரை கைது செய்து, வாகனங்களில் ஏற்றிச்சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com