ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது: போக்குவரத்துத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சிஐடியு அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
பொதுத்துறை நிறுவனங்கள் தனியாா் மயமாக்கலுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிஐடியூ அரசுப்போக்குவரத்துத்தொழிலாளா் சங்கத்தினா்.
Updated On :30 டிசம்பர் 2020, 5:39 pm

DIN

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சிஐடியு அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா் நலனுக்கு விரோதமான தொழிலாளா் நலச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறையை நிறுவனங்களான ரயில்வே, விமானம், பாதுகாப்புத் துறை, காப்பீடு, தொலைத்தொடா்புத்துறை உள்ளிட்ட துறைகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மின்சாரச் சட்டம் 2020 - ஐ திரும்பப் பெற வேண்டும். அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பி அனைவருக்கும் வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு அரசுப்போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை எல்லீஸ் நகா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செயலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மத்திய துணைபொதுச் செயலா் எஸ். மணிமாறன் தொடங்கி வைத்துப்பேசினாா். தலைவா் பி. எம். அழகா்சாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். சம்மேளன துணைத் தலைவா் வி. பிச்சை நிறைவுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.