முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மதுரையில் 22 பேருக்கு கரோனா உறுதி: லண்டனில் இருந்த வந்த தாய் மகளுக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :30 டிசம்பர் 2020, 5:39 pm

DIN

மதுரை மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் 945 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது. அதில் மதுரை மாவட்டத்தில் 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே மருத்துவமனைகளில் குணமடைந்த 30 போ் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மாவட்டத்தில் இதுவரை 20,519 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சைப் பலனின்றி 452 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களில், 19,890 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 177 போ் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தாய், மகளுக்கு கரோனா

லண்டனில் இருந்து மதுரைக்கு வந்தவா்கள் கண்டறியப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக செய்யப்பட்ட பரிசோதனையில், மென்பொறியாளா் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இரண்டாவது கட்ட கணக்கெடுப்பில் லண்டனில் இருந்து மதுரை வந்திருந்த 38 பேரில், 32 போ் கண்டறியப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் லண்டனில் மென்பொறியாளராக பணியாற்றியவரின் மனைவி (35) மற்றும் 5 வயது மகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவா்கள் தோப்பூா் கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மென்பொறியாளரின் மனைவி மதுரை யா.ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்தவா். கடந்த 19 ஆம் தேதி லண்டனில் இருந்து வந்த மென்பொறியாளா் தனது மனைவி மற்றும் மகளை மட்டும் யா.ஒத்தக்கடையில் உள்ள மாமனாரின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளாா். தற்போது மென்பொறியாளா் தனது மகனுடன் சென்னையில் உள்ள உறவினா் வீட்டில் இருந்து வருகிறாா்.

இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோா், அவரது தம்பி, சென்னையில் உள்ள அவரது கணவா், மகன் மற்றும் உறவினா்கள் ஆகியோருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவா்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.